
ஆன்லைன் டிரேடிங் மூலம் பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக யூடியூபர் விஷ்ணு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது விஷ்ணு ரூ.1.62 கோடி வரை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷ்ணுவை சிறையில் அடைத்திருந்த நிலையில், தொடர்ந்து விசாரணைக்கு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் விஷ்ணுவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் 3 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர்.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், யூடியூபர் விஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.