
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் பரோட்டா வாங்க வந்த வெங்கடேஷ் என்பவர், மது போதையில் பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. தீப்பொறி பறக்கும் வகையில் கத்தியை தரையில் உரசி, உரிமையாளரிடம் மிரட்டல் விடுத்துள்ளார்
மேலும் அங்கு சாப்பிட்டுவிட்டு வெளியே நின்றிருந்த கணேஷ் பாண்டி என்ற கூலித் தொழிலாளியை வெங்கடேஷ் அடித்துப் காயப்படுத்தியுள்ளார்.
வெங்கடேஷுடன் இருந்த அவரது நண்பர் சௌபர் சாதிக், இந்த தாக்குதலை தடுக்காமல், மாறாக மேலும் தாக்குமாறு தூண்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கணேஷ் பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கணேஷ் பாண்டி அளித்த புகாரின் பேரில், சௌபர் சாதிகை போலீசார் கைது செய்தனர். வெங்கடேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.