
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலிக்க முயன்று தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை மாணவி தொடர்ந்து மறுத்துள்ள நிலையில், நேற்று மாணவி விருத்தாசலம் கடைவீதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது அருள்குமார் அங்கு வந்துள்ளார். அப்போது மாணவியுடன் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
திடீரென கையில் இருந்த கத்தியால் மாணவியின் முகத்தில் அருள்குமார் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தாக்குதலில் காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விருத்தாசலம் போலீசார் அருள்குமாரை கைது செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாணவி மீதான இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.