
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் கருமலை (26), சமீபத்தில் ஒரு ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்திருந்தார்.
அவர், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் பெருங்குடியில் நடந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் அவரது நண்பர் பாலமுருகனும் (26) ஆறாவது குற்றவாளியாக இருந்தார். இருவரும் சிறையில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த நிலையில், கருமலை மட்டும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜாமினில் வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று கருமலை, கீரைத்துறை பகுதியில் இருந்து நண்பர் பாலமுருகனை சந்திக்க பெருங்குடிக்கு வந்தபோது, மூன்று வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரையும் துரத்தி கத்தியால் வெட்டிக் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கருமலை பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுருகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட பெருங்குடி போலீசாருடன், உறவினர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தகராறில் ஈடுபட்டனர். “கொலைக்காரர்கள் கைது செய்யப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
புதிதாக நடைபெற்ற இந்த கொலை, முன்பு நடந்த முனீஸ்வரன் கொலை வழக்கு தொடர்பான பழிக்குப் பழியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தற்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி காவல் கண்காணிப்பாளர் (ADSP) மன்சூர் நாகர் தலைமையில் விசாரனை நடைபெற்று வருகிறது
குற்றவாளிகளாகக் கருதப்படும் ஆறு பேரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்