
ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. அப்போது அவர் உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி எட்வின் பிரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.