பரோல் கைதியை கொண்டாடும் இளைஞர்கள்

Youth Celebrate Parole Prisoner

தமிழ் நாட்டையே உலுக்கிய சாதி ஆணவக் கொலையில் கைதான யுவராஜை கொண்டாடும் இளைஞர்களின் நடவடிக்கை கண்டு சமூக ஆர்வளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 2015 ஆம் ஆண்டில்  ஈரோட்டில் நடந்த கோகுல்ராஜ் கொலை சம்பவத்தை இன்று வரை நாம் மறந்திட முடியாத ஒன்று. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் இந்த யுவராஜ்.

சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜூம் ,சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். கோகுல் ராஜ் வேறு சமூகத்தை சார்ந்தவர்  என்பதலால் யவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோகுலை கடத்தி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது கோவை மத்திய சிறையில் உள்ள யுவராஜ், கடந்த வாரம் அவரது வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பரோலில் வந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் அவரை ஒரு தேசத் தலைவர் போல் போற்றி பலதரப்பட்ட வீடியோக்கள்  சமூக வளைதளங்களில் பரவியது. மேலும் பல இளைஞர்கள் இவரை மாவீரன், இனத் தலைவர் என்று  என்று கூறி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இதனை கண்ட சமூக ஆர்வளர்கள் பலரும், சாதிய வெறி பிடித்து அப்பாவி இளைஞனை கொண்ற இவரை எப்படி இந்த சமூகம் வெட்கமின்றி கொண்டாடி வருகிறது,

மேலும் இந்த சாதிய மோகத்துக்கு பல இளைஞர்கள் இன்றும் பின் தொடர்ந்து செல்வது பெறும் வருத்தமளிக்கிறது என்றும், இளைஞர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.