கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

Police arrest a young man for selling ganja and seize narcotics worth ₹3 lakh.

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் 3 லட்சம் ரூபாய் மதிப்பில்  ‘குஷ்’ எனப்படும் உயர் தர கஞ்சா  ₹33,500 ரொக்க பணம் , ஒரு கார் செல்போன் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

பிரனேஷ் மீது மத்திய போதைப்பொருள் தடையுச்சட்டம் (NDPS Act) பிரிவுகள் கீழ் வழக்குப் பதிந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம், மாநகர பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையை காட்டுவதாகவும், காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.