
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லிவின் என்ற கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்
இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. பின்னர் திருமணம் செய்வதாகக் கூறிய லிவின், “வீட்டுக்கு வாடகை செலுத்த பணம் தேவை. நம்முடைய திருமண வாழ்வுக்காக இவை அவசியம்” எனக் கூறி, மாணவியிடம் 26 சவரன் நகையும், ரூ.50,000 ரொக்கத்தையும் பெற்றுகொண்டு மாணவியை ஏமாற்றிவிட்டு , சொந்த ஊரான கர்நாடகாவுக்கு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி லிவினை கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆன்லைன் பழக்கத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.