குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போரூரில் ஐடி ஊழியர் கைது!

"IT employee arrested in Porur for sexually assaulting a young woman after administering a sedative."


சென்னை போரூரைச் சேர்ந்த அஜித்குமார் என்ற ஐடி ஊழியர், உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில், தனிமையில் சந்தித்த போது அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதுடன் அதனை புகைப்படமும் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை தொடர்ந்து மிரட்டி, தான் கூப்பிடும் போதெல்லாம் வராவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த நெருக்கமான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அஜித்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது.


இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.