வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறய இளைஞர்!

"A young man allegedly misbehaves with a woman who was alone in her house – incident under investigation."

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றார்.

அப்போது பெண்ணின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இளைஞரை பிடித்து அடித்து இவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் . விரைந்து வந்த ராசிபுரம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட அந்த இளைஞர் சேலம் மாவட்டம் சின்னவீராணம் பகுதியை சேர்ந்த கவுதம் (21) என தெரியவந்துள்ளது