பிறந்த குழந்தையை கட்டைப்பையில் கொண்டு வந்த இளைஞர்

"Shocking incident as young man carries newborn baby in a sack."


சென்னை கோட்டூர்புரம் பகுதியில் 21 வயதான பிரவீன் என்ற இளைஞர், தனது காதலி ஜெனிபருடன் உறவில் இருந்து சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார். அந்த குழந்தையை சாலையில் கிடந்ததாக கூறி, கட்டைப்பையில் வைத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஒப்படைக்க முயன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை இருவருக்கும் பிறந்தது என்பது உறுதியானது. 12 வயதிற்குட்பட்ட குழந்தையை பெற்றோர் கைவிடுவது சட்டப்படி குற்றமாக இருப்பதால், பிரவீன் மற்றும் ஜெனிபர் மீது இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.