“நீங்கள் விற்றுவிட்டீர்கள், நாங்கள் மாட்டோம்!” – இபிஎஸ் கருத்துக்கு கனிமொழி பதிலடி

Kanimozhi responds strongly to Edappadi Palaniswami, saying “You sold out, we won’t!” during a political exchange.

தொகுதி மறுவரையரறை விவகாரத்தில், இன்னும் வராத ஒன்றை “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.”  என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை தனது எக்ஸ் சாடியிருந்தார் 

இதற்கு பதிலடியாக, திமுக எம்பி கனிமொழி தனது பதிவு மூலம் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். “தனிப்பட்ட அரசியல் பிழைகளுக்காக தமிழ்நாட்டின் நலன்களை துறந்து, டெல்லி எஜமானர்களிடம் அடிமைப்பட்டவர்கள், எமக்கு போதிக்க உரிமை இல்லை,” எனக் கூறியுள்ள அவர், “தமிழ்நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்” என எடப்பாடி பழனிசாமியின் செயல்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “அச்சுறுத்தல் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. டெல்லி எஜமானர்களின் பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது. தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசமைப்பு தீர்வையே நாங்கள் கோருகிறோம். அரசமைப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை குரல் எழுப்புவோம். நீங்கள் விற்றுவிட்டீர்கள். நாங்கள் மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.