செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு வைத்தியர் என மக்களை ஏமாற்றி வந்த பெண் கைது!

"Image representing a woman arrested for impersonating a doctor with only a nursing qualification."

ஈரோட்டில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, மருத்துவர் எனக்கூறி மருத்துவம் பார்த்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெருமுகைபுதூர் வரப்பள்ளம் பகுதியில் ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரின் பெயரை வெளியில் போர்டில் வைத்துக்கொண்டு, செவிலியர் பிரியா தனது வீட்டில் எம்பிகே மருத்துவமனை என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்தகுமாரி மருத்துவமனை மீது ஆய்வு மேற்கொண்டபோது, பிரியா நர்சிங் படிப்பு மட்டுமே முடித்துள்ளார் என்பதும், மருத்துவர் டாக்டர் கஸ்தூரி என்பவரின் பெயரை போர்டில் வைத்துக்கொண்டு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

மேலும், ஓய்வுபெற்ற அரசு மருத்துவரிடம் பெயர் பயன்படுத்த அனுமதிக்க லஞ்சம் கொடுத்ததாக விசாரணையில் உறுதியாகியுள்ள நிலையில், பிரியாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற மருத்துவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.