சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் பரிதாபமாக பலி!

A woman was fatally hit by a lorry while walking along the road in a tragic accident.


கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த சோகம் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் மார்க்கெட் சாலையில் கமலா என்ற பெண் சாலையை கடந்தும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரியின் முன்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் லாரியின் முன்பகுதியை கவனிக்காமல் டிரைவர் லாரியை இயக்கியுள்ளார்.

அப்போது லாரி மோதி கீழே விழுந்த கமலாவின் மீது லாரியின் முன்சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த பயங்கர விபத்து நடந்த காட்சி அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் பெற்ற சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து, லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.