
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்த சோனியா முகிலன் என்பவரை திருமணம் முடித்து கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் அவர் சென்னை ஆவடியில் ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
சோனியா கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான கொங்கராயனூரில் இருந்தபோது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் உடனே அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சோனியா உயிரிழந்தார்.
இதற்கிடையில் சோனியா எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், “தன்னுடன் பணிபுரிந்த காவலர் ஒருவர் தான் தற்கொலைக்கு காரணம்” என குறிப்பிட்டு வைத்துள்ளார்.
இதனை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.