
சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி மற்றும் உணவுக்கான செலவை போலீசாரே கட்டும்படி வற்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.
பொலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ரேகா எனும் பெண் காவலர் ஆவார். இவர் சென்னையில் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவர் பணிக்கு வராமல் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
செம்பியம் போலீசார் இந்த சம்பவத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தி போலீசாரையே மிரட்டிய சம்பவம் தற்போது காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.