
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கண்ணாடி பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கூலி தொழிலாளியான இவரது மனைவி சுமதி (வயது 41), அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இரு மகன்களின் தாயான சுமதி, தினமும் போலவே கடந்த 28ம் தேதி தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றிருந்தார்.
அன்று மாலை, தனது கணவரான செல்வத்துக்கு தொலைபேசியில் அழைத்து, “கையில் ஏதோ கடித்துவிட்டது, உடம்பு சீராக இல்லை” என தெரிவித்துள்ளார்.
உடனே அங்கு வந்த செல்வம், அவசரமாக மனைவியை பவானி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், உயர் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுமதி உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர் தெரிவித்தார்.
விசாரணையில், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமதியை பாம்பு கடித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்