
நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே வசித்து வந்த சுவிகரன் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆனால் மது பழக்கத்திற்கு அடிமையான அவர், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் அடிக்கடி வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு சுவிகரன், வீட்டில் இருந்த ஹோம் தியேட்டரை உடைத்து பிளந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, மகன் மற்றும் மனைவியின் தங்கை இணைந்து மண்வெட்டியால் தாக்கியதில் சுவிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் பெற்ற தளபதி சமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.