அமைச்சர் பொன்முடி கட்சி பதவி பறிப்பு! காரணம் என்ன!

அமைச்சர் பொன்முடி கட்சி பதவி பறிப்பு! காரணம் என்ன

அமைச்சர் பொன்முடி வகித்த வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி “கடவுள் கொள்கையை பரப்புவதில் காமச்சுவையை அதிகம் கையாண்டது சைவமா,வைணவமா என்ற தலைப்பில் 1970களில் நடந்த பட்டிமன்றத்தில் பேசப்பட்ட கருத்து எனக் கூறி பாலியல் தொழிலாளிக்கும், வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் என ஒரு கருத்தை தெரிவித்தார்”.

இந்த கருத்து பெண்களை குறித்து அறுவறுக்கத்தக்க வகையில் உள்ளாதக சமூக வலைதளங்களில் அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டங்களை தெரிவித்து வந்தனர்.

சர்ச்சையான பேச்சு வழக்கில் சிக்குவது அமைச்சர் பொன்முடிக்கு இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னதாக மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ,ஓசி பயணம் என குறிப்பிட்டுருந்தார்.

மேலும் பொது வெளியில் தாழ்த்தப்பட்ட பெண்னை பார்த்து ‘ நீ எஸ் சி தான’ என பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, ஆனால் அப்போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் திமுக தலைமை கழகம் எடுக்கவில்லை.

இந்நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும், நாடளுமன்ற குழு தலைவருமான எம்.பி .கனிமொழி “ அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது”. என தனது X பக்கத்தில் பொன்முடிக்கு பேச்சுக்கு எதிராக கருத்து தெரிவிருந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்படுவதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.