இளைஞர் கடத்தல் வழக்கில் தீடிர் திருப்பமாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், காவல் துறைத் தலைவராக இருந்த ஏடிஜிபி ஹெச்.எம். ஜெயராமும் முக்கிய பாத்திரங்களாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளைஞரின் சகோதரர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடத்தல், திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் , பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஹெச்.எம். ஜெயராமும் உள்ளிட்டவர்களும் இந்த சம்பத்தில் தொடர்புபட்டுள்ளதாக குற்றசாட்க்கள் எழுந்தது
இதானால் குறித்த வழக்கை விசாரிக்க பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சென்ற போலீசாரை ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர்கள் தடுத்ததோடு, அவர் தலைமறைவானதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் மனுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.
நீதிபதி பி.வேல்முருகனின் முன் நடைபெற்ற விசாரணையில், காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் குறைந்தது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சரத்குமார் என்ற வழக்கறிஞர் அளித்த வாக்குமூலம் மூலம் ஜெகன்மூர்த்திக்கும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறை வாகனமொன்றில் மீட்டுச் செல்லபட்டதாகவும் அந்த வாகனம் ஏடிஜிபி ஜெயராமனுக்குச் சொந்தமானதாக என்பது கண்டறியப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஹெச்.எம். ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
மேலும் பூவை ஜெகன்மூர்த்தியையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பின்னணி பரிசீலிக்கப்படும் போது, மேலும் அதிர்ச்சியளிக்கும் பல விவரங்கள் வெளிவந்துள்ளன.
மகளின் காதல் திருமணத்தால் உண்டான கோபத்தில், பெண்ணின் தந்தை வனராஜா அவரது உறவினர் மணிகண்டன் என்பவர் மூலம் மகேஸ்வரி என்ற பெண்ணை அணுகி தனது மகளை கடத்தி கொண்டு வந்து தருமாறு கேட்டுள்ளது தெரியவந்தது.
அப்போது மகேஸ்வரி, பூவை ஜெகன்மூர்த்தியிடமும் ஜெயராமிடமும் தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தில் உதவிக்கேட்டிருக்கிறார்.
இந்த உரையாடலின் பின்னணியில், காதல் ஜோடியை கூலிப்படையினரால் கடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்கள் வீட்டில் இல்லாததால், அந்த இளைஞரின் சகோதரரை TN 06 G 0606 என்ற பதிவு எண்ணை கொண்ட போலீஸ் வாகனத்தில் கடத்தியுள்ளனர்.
மகேஸ்வரி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “ஏடிஜிபி ஜெயராம் எனது உறவினர். அவரே எனக்குப் போலீஸ் வாகனத்தை வழங்கினார்” என தெரிவித்துள்ளார். இதுவே ஜெயராமின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது
மேலும் மகேஸ்வரின் தொலைபேசி உரையாடல்களை சோதனை செய்த போது, பூவை ஜெகன்மூர்த்தி, ஜெயராம் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் இடையே தொடர்ச்சியாக உரையாடல்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் வழக்கின் விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன.
அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.