
திருவள்ளூர் மாவட்டம் புலியூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தரமான முறையில் வளர்த்து கொள்முதலுக்குத் தயாராக உள்ள நெல்லை விவசாயிகள், கொண்டு வந்து விற்பது வழக்கம்.
ஆனால் தற்போது அத்துமீறி, கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூட்டைக்கு ரூ.100 வழங்கினால் மட்டுமே நெல் வாங்குவதாகவும், இல்லையெனில் “ரகம் சரியில்லை”, “ஈரப்பதம் அதிகமாக உள்ளது” போன்ற காரணங்களை சொல்லி திருப்பி அனுப்புவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
இதனால் கடும் அதிருப்தி அடைந்த விவசாயிகள், தங்களது டிராக்டர்களை சாலையின் நடுவில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து அதிகளவில் பாதிபடைந்திருந்ததாக கூறப்படுகின்றது
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் பேசிக் சமாதானப்படுத்த முயன்ற நிலையில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும், உயரதிகாரிகளுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.