
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மத்திய தமிழ்நாட்டின் முக்கிய வாரச்சந்தைகளில் ஒன்றாகும். வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த சந்தை, தற்போது ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று காலை 6 மணிக்கே ஆரம்பமான சந்தையில், திருக்கோவிலூர், தியாகதுருவம், ஆசனூர், சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பெருமளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இதேபோல், சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்து, வெள்ளாடு, செம்மறி உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளை அதிக விலைக்கு வாங்கினர்.
ஒவ்வொரு ஆடும் அதன் ரகத்தின்படி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலை பெற்றது.
கடந்த வாரத்தில் ரூ.50 லட்சம் வர்த்தகம் நடந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.3 கோடியைத் தாண்டிய விற்பனை நடந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்