திருமண நகைகள் திருட்டு – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.ஆர்.பி.எப் வீராங்கனை கதறல்!

"Image of a distressed CRPF woman personnel accusing police of inaction after her wedding jewelry was stolen."


வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீராங்கனை, தற்போது தேசிய பாதுகாப்புப் பணிக்காக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார்.

செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள தனது திருமணத்திற்காக, சொந்த வீட்டில் பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தும் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டாலும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தனது திருமணத்தை முன்னிட்டு சேர்த்துவைத்த நகைகளை இழந்த வலி, காவல்துறையின் அலட்சிய போக்கு ஆகியவற்றால் மனமுடைந்த நிலையில், அவர் ஜம்மு காஷ்மீரிலிருந்தே வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் நாடு பாதுகாக்கிறேன். ஆனால் என் சொந்த ஊரில் எனக்கு நீதி கிடைக்காத நிலை” என்று கண்ணீர் மல்கக் கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்களிடையே வேதனையும் கோபமும் எழுந்துள்ளன.