தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்   – பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth asserts that their party is ready to contest elections independently if needed.

முதற்கட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தேமுதிக தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் நடைபெற்றது. இதில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில்  தேமுதிக, தனித்து போட்டியிட கூடு தயங்கமாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கூட்டணி அமைத்து போட்டியா அல்லது தனித்து போட்டியா என்பதை காலம்தான் முடிவு செய்யும். அதிமுகவுடன் சமூக உறவு உள்ளதா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தங்கள் கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது என அதிமுக கூறுவது அவர்களின் நிலைப்பாடு என குறிப்பிட்டார்.

விஜய் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் எங்கள் வீட்டு பையன். அவரின் தந்தையின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். நாங்கள் கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் கட்சி தொடங்கிய விஜய்யிடம் தான் கூட்டணி குறித்து கேட்க வேண்டும்” என கூறினார்.

மேலும், தேமுதிக சமூக நலனுக்காக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் கூட்டணிகளை வரவேற்கும் என்றும், வருவாய் மற்றும் வளர்ச்சிக்காக அடுத்த 6 மாதங்கள் கட்சியின் வலுப்படுத்தலுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகைக்கு நன்றியுடன் பதிலளித்த பிரேமலதா, “விஜய பிரபாகரனுடன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம்” என்றார்.