அதிக நிலங்களை வைத்துள்ளது வக்ஃப் வாரியம் !! எங்கே, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன !?

அதிக நிலங்களை வைத்துள்ளது வக்ஃப் வாரியம் !! எங்கே, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதா (2024) நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை வக்ஃப் வாரியம் 12ஆம் நூற்றாண்டில் இருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அரசாங்க தரவுகளின் படி பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் நிலங்களை சொந்தமாக வைத்திருக்கும் ஒரு அமைப்பு வக்ஃப் வாரியம் ஆகும்.

ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி நாடு முழுவதும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமாக 8.7 லட்சம் சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் பரப்பளவு 9.4 லட்சம் ஏக்கர்கள் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்களின் மதிப்பு 1.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த நிலப்பரப்பளவு, சில யூனியன் பிரதேசங்களின் மொத்த பரப்பளவை விட அதிகமாகும்.எடுத்துக்காட்டாக,டெல்லியின் மொத்த பரப்பளவு 3.66 லட்சம் ஏக்கராக உள்ளது, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி  1.21 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மற்றும் சண்டிகரின் பரப்பளவு தோராயமாக 28,000 ஏக்கர் ஆகும்.

வக்ஃப் வாரியத்தின் சொத்துகளில் 8,72,324 அசையா சொத்துக்களும் 16,713 அசையும் சொத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 97 சதவீத சொத்துக்கள் 15 மாநிலங்களில் மட்டுமே உள்ளன

வக்ஃப் வாரியத்தின் பெரும்பாலான சொத்துக்கள் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் தான் உள்ளது. வக்ஃப் வாரியத்தின் கீழ் இருக்கக்கூடிய அசையா சொத்துக்களில் 1.2 லட்சம் சொத்துக்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கின்றன. அதே போல் 16,813 அசையும் சொத்துக்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 60,223 வக்ஃப் சொத்துக்களும், மேற்கு வங்கத்தில் சுமார் 80,480 சொத்துக்களும், ஆந்திராவில் 10,708 மற்றும் குஜராத்தில் 30,881 சொத்துக்களும் உள்ளன.மற்றும் பிகாரில் தோராயமாக 8,600 சொத்துக்கள் உள்ளன. தற்போது உள்ள இந்த புள்ளி விவரங்கள் நடப்பாண்டில் மேலும் அதிகரித்துள்ளன. மேற்கண்ட தரவுகள் அணைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2009ஆம் அண்டு உருவாக்கப்பட்ட வம்சி தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த தளம் தான் வக்ஃப் சொத்துகளுக்கான தரவுத்தொகுப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது.