
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பெரும் திரளான மக்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. விஜய் உரையாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெண் மயக்கம் அடைந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விஜய் பேச்சை முடித்து புறப்பட்ட பிறகு கூட்டம் கலைந்து செல்லும் வேளையில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. பின்னர் வந்த தகவலின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. புதிய தகவலின்படி 29 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது
இதில் 3 குழந்தைகளும் அடங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தற்போது பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.