இந்திய இராணுவத்தின் நெறிமுறைகளை மீறாத ஆபரேஷன் சிந்தூர் தொடரவே  விருப்பம்: துணை ஜனாதிபதி

operation Sindoor

பனாஜி: தெற்கு கோவாவின் வாஸ்கோவில் மோர்முகாவ் துறைமுக ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்வில், முதல்வர் பிரமோத் சாவந்த் ,கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, மற்றும் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைகளுக்கான மத்திய இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பாரதம் மாறிவிட்டது. இன்றைய பாரதம் நம்பிக்கை மற்றும் மனவலிமை மிக்கதாக உள்ளது.

நமக்கு சிக்கலை கொடுக்கும் அண்டை நாட்டிற்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கே பிரதமர் மோடி  அனுப்பிய செய்தியில், பயங்கரவாதத்தினை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும்  கூறியுள்ளார்.

மேலும் ஆப்ரேஷன் சிந்தூரின் போது, துல்லியமாக தாக்குதல் நடத்திய நமது ஆயுதப்படையினரின் திறமையை பார்த்த சர்வதேச சமுதாயம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து யாரும் ஆதாரம் கேட்கவில்லை. பாகிஸ்தானின் தற்போதைய நிலையே அதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.                                                          

பயங்கரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது.         பயங்கரவாதிகள் அடையாளப்படுத்தப்படும் போது அவர்கள்                 வேட்டையாடப்படுவார்கள்.

இந்திய இராணுவத்தின் நெறிமுறைகளை மனதில் கொண்டு பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக  கருதி, சர்வதேச எல்லைக்கு அப்பால் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாகவும், கடல்சார் சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. நாட்டின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும்  ஜக்தீப் தன்கர் பேசினார்.