பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

"Village Administrative Officer (VAO) arrested for soliciting a ₹5,000 bribe for processing a patta name transfer request."


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தவர் கணேசனிடம், அங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கணேசன் முதற்கட்டமாக ரூ.3,000 வழங்கிய போதும், மீதமுள்ள ரூ.2,000 தொகையை வழங்கினால் மாத்திரமே பட்டா மாற்றம் நடைபெறும் என்று வி.ஏ.ஓ கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கணேசன், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையில் புகார் அழித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வி.ஏ.ஓ பிரபுவை லஞ்சம் வாங்கும் நேரத்தில் கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு சேவையில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு நேர்மையான சேவை வழங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஆனால் லஞ்சம் போன்ற ஊழல் செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது மக்கள் நம்பிக்கைக்கு பேரிழியாகவே அமைக்கிறது. இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக, தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.