பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடி வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்!

"Scene of a country-made bomb explosion at a polytechnic college where two students were seriously injured."

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் கோயில் திருவிழாக்களில் வெடிக்கப்படும் நாட்டு வெடிகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வெடிகளை 2 மாணவர்கள் இழுத்து விளையாடியபோது ஏற்பட்ட உராய்வால் அவை திடீரென வெடித்துள்ளன. வெடிப்பின் தாக்கத்தில் ஒருவருக்கு கையில், மற்றொருவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.