போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் மறுப்பு!

News headline about the arrest of two individuals, Sreekanth and Krishna, in a drug case, with bail denied.


போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கெவின் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறப்படும் கெவினின் கூட்டாளிகள் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மேலும் சிலர் தொடர்புடையவர்களா என்பதை ஆராய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.