கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் — அளவிடும் பணியில் அதிகாரிகள்!

Two migrant laborers arrested for illegal possession of country-made firearms.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரன், அந்த கோவில் நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று அந்த இடத்துக்கு நேரில் சென்று அளவிடும் பணியில் ஈடுபட்டனர். கோவில் நிலம் மீதான ஆக்கிரமிப்பு உண்மைத் தன்மை மற்றும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவில் நிலங்களை தனிப்பட்ட வசதிக்கு பயன்படுத்தும் சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.