
ட்விட்டரின் பழைய லோகோ 30 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் 2006-ம் ஆண்டு டுவிட்டர் என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்த ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய நாள் முதல், பல்வேறு மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தார்
ட்விட்டரின் பெயரை X என மாற்றியதுடன், ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண முறையை அமல்படுத்தினார்.
மேலும், ட்விட்டரின் அடையாளமாக இருந்த நீல நிற பறவை லோகோவை மாற்றியதுடன் ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அந்த லோகோ அகற்றப்பட்டது.
254 கிலோ எடையுள்ள இந்த லோகோ கூடைப்பந்து வீரர் லாரி பேர்டின் நினைவாக “லாரி” என்று அழைக்கப்பட்டது.
இவ்வாறு அகற்றப்பட்ட லோகோவானது அரிய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்யும் ஆர் ஆர் ஏல நிறுவனத்தின் மூலம் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டது
அவ்வாறு ஏலத்தில் விடப்பட்ட இந்த லோகோ 34,375 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.30 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது
மேலும் இந்த ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் 1976 ம் ஆண்டு கையொப்பமிட்ட ஆப்பிள் காசோலை 112,054 டாலருக்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது