பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

"Secret lover arrested by police in shocking twist to woman’s murder case"

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து மணப்பாறை போலீசார் விசாரணை தொடங்கினர்.

அதில், சுகன்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்திருந்தாலும், கணவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக தெரியவந்தது. இதற்கிடையில், கஸ்பா பொய்கைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவருடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சுகன்யா, தினேஷின் அழைப்புகளை தவிர்த்து வந்துள்ளார். 15 நாட்களாக அவர் அழைப்பை எடுக்காததால் ஆத்திரமடைந்த தினேஷ், செங்கல்பட்டில் சுகன்யாவை சந்தித்து, பின்னர் மணப்பாறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, சுகன்யா இனி பேச வேண்டாம் என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதில் கடும் கோபமடைந்த தினேஷ், துப்பட்டாவால் கழுத்து நெரித்து சுகன்யாவைக் கொன்று உடலை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துள்ளார். தலைமறைவாக இருந்த தினேஷை, மணப்பாறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.