
சாலையில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மன்னூத்தி பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பரபரப்பான சாலையின் நடுவில் வாகனங்களுக்கு இடையே தப்பிக்க முடியாமல் பூனையொன்று சிக்கி தவித்துக் கொண்டிருந்ததுள்ளது
அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிஜோ என்ற இளைஞர் அந்த பூனை செய்வதறியாது திணறிக் கொண்டிருப்பதை கவனித்துள்ளார்
நடுரோட்டில் சிக்கித் தவிக்கும் பூனையைக் காப்பாற்றும் கருணை உள்ளதோடு வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி சென்று காப்பாற்ற முற்பட்டபோது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று அந்த இளைஞனை மோதியுள்ளது
இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பூனையை காப்பாற்ற சென்று பரிதாபமாக இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம், பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.