
பொதுத்தேர்வு எழுத பேருந்துக்கு காத்திருந்த 12-ஆம் வகுப்பு மாணவி அரசு பேருந்து பின்னாடியே துரத்திக் கொண்டு ஓடிய சம்பவம் தமிழ்நாட்டில் இன்று பெரும் அதிர்வளைகளை எழுப்பியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, கொத்தாக கோட்டை பேருந்து நிறுத்தத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்குச்செல்ல காத்திருந்துள்ளார்.
ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்து, மாணவி நிற்கும் நிலையத்தில் நிற்காமல் சென்றுள்ளது
பேருந்து நிற்காததால் பதற்றமடைந்த மாணவி, தேர்வைத் தவறவிடக் கூடாதென்று, அந்தப் பேருந்தை துரத்தி கொண்டு 200 மீட்டர் தூரம் வரை பின்னால் ஓடியுள்ளார்
அப்போது இந்த சம்பவத்தை பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் கவனித்து பேருந்தை நிறுத்துமாறு ஹாரன் அடித்துள்ளனர்
ஆனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் தள்ளிசென்ற பின்னரே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அதிகளவில் பயணிகள் இல்லாமல் காளியாகவே சென்றபோதும் ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியான சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்ட பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் முனிராஜையும் நடத்துநரையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் பணியிடை நீக்கம் செய்து அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.