டிப்பர் லாரி அரசுப் பேருந்துடன் மோதி விபத்து : திமுக பிரமுகர் உயிரிழப்பு!

Image showing the aftermath of a collision between a tipper lorry and a government bus, resulting in the death of a DMK leader.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே டிப்பர் லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் நகரப் பேருந்து மீது மோதியுள்ளது. பின்னர் சாலையோரத்தில் இருந்த ஏ.டி.எம்மை உடைத்து உள்ளே புகுந்துள்ளது

அந்த நேரத்தில் அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த கூடுவாஞ்சேரி நகராட்சி 24-ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாநகரப் பேருந்தில் பயணம் செய்த சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.

இந்த விபரீதம் குறித்த விவரங்களை போலீசார் பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.