
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டில் புலியை வேட்டையாடிய வழக்கு தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த பவாரியா கும்பல் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, ராஜஸ்தானிலிருந்து வந்த கும்பல் சத்தியமங்கலம் பகுதியில் கம்பளி விற்பனை செய்து வந்தது. அப்போது வனத்துறையினர் நடத்திய சோதனையில், அவர்கள் புலியை வேட்டையாடி அதன் தோல், நகம், பற்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில், குற்றம் நிரூபணமானதால், ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.