சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்!

Three police officers suspended for alleged involvement in illegal liquor sales.

சேங்கனூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சரவணன், ராஜேஷ், செல்வேந்திரன் ஆகியோர் அவ்வபோது தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூவரும் சட்டவிரோத விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் போலீசாரின் ஒழுங்கு மீறல் குறித்து மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.