
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விக்னேஷ், தினகரன் மற்றும் ஒருபெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், விக்னேஷும் தினகரனும் ரயிலில் மும்பைக்கு சென்று, அங்கிருந்து அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் போதைக்காக விற்பனை செய்திருந்தது தெரியவந்துள்ளது.
மூவரிடமிருந்தும் 500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.