
திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்ட விஜய், பிரசார வாகனத்தில் ஏறி தொண்டர்களை சந்தித்தார். அப்போது, தோளில் பச்சை துண்டு அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் பேசுகையில், “திருவாரூர் என்றால் நியாபகம் வருவது தியாகராஜர் கோவில், திருவாரூர் தேர் தான். அது இந்த மண்ணின் அடையாளம். நீண்ட நாட்களாக நின்று விட்டிருந்த தேரை இயக்கியது நான் தான் என பெருமைபடும் ஒருவர் உங்களுக்கு தெரியும். ஆனால், அவரது மகன் ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையால் நிறுத்திவிட்டார்,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “திருவாரூர் தங்களின் சொந்த மாவட்டம் எனச் சொல்லிக் கொள்பவர், இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதில்லை. அப்பாவின் பெயரை எல்லா இடங்களிலும் வைத்தாலும், அப்பா பிறந்த திருவாரூரில் சாலை வசதி கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இங்குள்ள மருத்துவக் கல்லூரி தான் சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளது,” என விமர்சித்தார்.
இவ்வாறு விஜய் தெரிவித்தார்