நாளை மறுநாள் 3-ம் கட்டமாக நடைபெறவுள்ள கல்வி விருது வழங்கும் விழா

Announcement of the third phase of the Education Awards Ceremony scheduled for the day after tomorrow.

த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் , கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில்  சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, மாணவர்களை ஊக்குவிக்கும் பரிசளிப்பு விழா இரண்டு கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

முதல் கட்டமாக கடந்த மே 30-ம் தேதி நடைபெற்ற விழாவில் 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக ஜூன் 4-ம் தேதி 84 தொகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு வைரக் கம்மல் வழங்கப்பட்டதுடன், முதலாவது மூன்று இடங்களை பிடித்த அனைவருக்கும் ₹5,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த தொடர்சியாக மூன்றாம் கட்ட விழா நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. விழாவில் பங்கேற்க உள்ளோருக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட செயலாளர்களிடம் இன்று வழங்கினார்.

மேலும் இந்த வாரத்திலேயே நான்காம் கட்ட பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், முந்தைய கட்டங்களில் தவறவிட்ட மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். 

இவ்விழாக்களில் விஜய் நேரில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவதாகவும், கல்வி சாதனையாளர்களை நேரில் வாழ்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.