
நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தளர்ந்து, தெருவில் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்தபோதும், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.
இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை நடுவில் பெரிதான பாறை கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாறையை விரைவாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.