டாஸ்மாக் முறைகேடு கண்டித்து போராட்டம் – பாஜக முக்கிய தலைவர்கள் கைது !!

TASMAC Scam Protest

டாஸ்மாக் ஊழல் முறைகேட்டை கண்டித்து பாஜக-வினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், போராட்டத்திற்கு முன்பாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 06 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல மதுபான அலுவலங்களில் சோதனை நடத்தினர்,

சோதனை முடிவில் டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது, இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதையெடுத்து டாஸ்மாக் மீதான ஊழலை புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள, தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போரட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த போராட்டத்திற்க்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்த செல்ல முயன்ற போது தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

சென்னையை அடுத்த உள்ள அக்கரை சந்திப்பு அருகே  தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

இதையெடுத்து செய்தியாளர்களை சந்திந்த அண்ணாமலை பேசியதாவது:,

“திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடை நடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?. தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக முன்னெடுத்த இந்த போரட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் விசிகாவின் கொள்கையும் மதுவை ஒழிப்பது தான், அதனால் பாஜக முன்னெடுத்த இந்த போராட்டத்தை வரவேற்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.