கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

Tamil Nadu Vaazhvurimai Katchi leader murdered in a brutal knife attack in Krishnagiri district.

கெலமங்கலம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வெட்டிக்கொன்று தப்பியுள்ளனர். தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் (35) தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளராக பணியாற்றி வந்தார். மேலும் பன்றி வளர்ப்பு தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ரவிசங்கரை இருவர் பின் தொடர்ந்து ஓடவிட்டு கத்தியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.