சூடுபிடிக்கும் தமிழக அரசியல் கலம் : கூட்டணி குறித்து வாய் திறந்த தவெக!

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் கலம் கூட்டணி குறித்து வாய் திறந்த தவெக!

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது . 

பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை மும்முறமாக மேற்கொண்டு வரும் நிலையில்,  எந்த கட்சி எவருடன் கூட்டணி வைக்கிறது என்ற செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன 

குறிப்பாக அதிமுக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருவது அன்மையில் உறுதியாகியிருந்தது.

மறுபுறம் திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தொடர்வதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அத்துடன், தேர்தல் காலம் நெருங்கும்போது புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.  

இதேவேளை, நாம் தமிழர் கட்சி தேர்தலை தனித்து தான்  சந்திக்கும் என்றும்  அவர்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை  என்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். 

இது இவ்வாறு இருக்கையில் எந்த ஒரு கூட்டணி அறிவிப்பும் இன்றி மௌனம் காத்து வந்த தவெக, தற்போது யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து புதிய அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது.

அதாவது தவெக தலைவர் விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தற்போதைக்கு கட்சியின் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்துவது, மக்களை சந்திப்பது, கட்சி தொண்டர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவது  போன்ற முக்கிய பணிகளில் மட்டுமே தவெக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது என்பதால் மக்கள் பயணம் முடிந்த பின்னர் இந்த வருட இறுதியில்  அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு   கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.