தமிழ்நாடு பட்ஜெட்: ” ₹ ” பதில் “ ரூ” இலச்சினையில் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி !!

Tamil Nadu Budget State Govt's Bold Move to Replace ₹ with ரூ Symbol

பணத்தை குறிக்கும் இந்தியாவின் அதிகாராப்பூர்வமான தேவநாகரி எழுத்து குறியீட்டிற்கு ” ₹ ”  பதில் தமிழ் எழுத்தான “ ரூ” வை மாற்றி, எல்லார்க்கும் எல்லாம் என்ற வாசகத்துடன் புதிய நிதிநிலை  இலச்சினையை (பட்ஜெட் லோகோ) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தேசியக் கல்விக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, நிதி ஒதுக்கீடு போன்ற பிரச்சனையால் ஒன்றிய அரசிற்கும், தமிழ்நாடு அரசிற்கும் பனிப்போர் நடந்து வரும் சூழலில் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை இலச்சினையை (பட்ஜெட் லோகோ) தமிழக அரசு இன்று வெளியிட்டது, இதில் பணத்தை குறிக்கும் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேவநாகரி எழுத்து குறியீட்டிற்கு ” ₹ ” பதில் தமிழ் எழுத்தான “ ரூ” வை மாற்றி, எல்லார்க்கும் எல்லாம் என்ற வாசகத்துடன் புதிய நிதிநிலை  இலச்சினையை (பட்ஜெட் லோகோ) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது இது தேசிய அளவில் விவாத பொருளாக மாறி உள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இதுகுறித்து X தளத்தில் கண்டங்களை தெரிவித்த அண்ணாமலை கூறியதாவது;

இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட , அதிகாரப்பூர்வமான இந்த குறியீட்டை மாற்றிய செயல் ஒரு முட்டாள் தனமானது. மேலும் இந்த குறீயீட்டை உருவாக்கியது திமுக-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் உதய் குமார் தான் என்று முதல்வருக்கு தெரியுமா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார்.

தேவநாகரி என்பதால் நீக்கம்

மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசியவை; தேவநாகரி எழுத்து முறை வேண்டாம் என்பதாலே நிதிநிலை இலச்சிணையில் இருந்து  ” ₹ ” குறியீடு மாற்றப்பட்டது.

” ₹ ” இந்த குறியீடு எப்போது அங்கீகரிக்கப்பட்டது?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில், பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் உள்ளன. அமெரிக்காவின் பணத்திற்கு டாலர்,இங்கிலாந்தில் பவுண்டு,ஜப்பானில் யென்,ஐரோப்பிய நாடுகளில் யூரோ எனக் குறியீடுகள் உள்ளன.அதுபோல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு (Indian Rupee Sign ) உள்ளது.

இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பணத்தினை ரூபாய் என்று அழைக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கியே ரூபாயை வெளியிடுகிறது.இந்தியாவில் பெரும்பாலும் ருபீ, ரூபாய்,ரூபயி போன்ற வார்த்தைகளில் அழைக்கின்றனர்.அதே சமயத்தில் மேற்கு வங்காளம்,அசாம்,ஒரிசா போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் பணத்தை டாக்கா என்ற பெயரில் அழைக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு இந்திய ரூபாய்க்கான குறியீடு ஒன்றை தேர்வு செய்வதற்காக ஒன்றிய அரசு ஒரு போட்டியை அறிவித்தது. இப்போட்டியில் 3331 நபர்கள் கலந்து கொண்டு ரூபாய்க்கான குறியீடுகளை தயாரித்து அனுப்பினர்.இதில் 5 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 5 குறியீடுகளில் சிறந்த குறியீடு ஒன்றை 2010 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று தேர்வு செய்தனர். இந்திய ரூபாயின் புதிய குறியீடு தேவநாகரி (இந்தி) எழுத்தான ( ` –`RA) ““மற்றும் ரோமன் எழுத்தான RR(ஆர்) ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த டி.உதயகுமார் (D.Udayakumar) ஆவார்.

உதயகுமார் பதில்

தமிழக அரசு நிதிநிலையில் இலச்சினையை மாற்றியது தொடர்பாக உதயகுமார் கூறியதாவது; தமிழக அரசு இலச்சினையில் குறியீட்டை மாற்றியது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை, மேலும் தமிழக அரசின் இந்த முடிவிற்கு பின்னால் ஏதோ காரணம் இருக்கும். இது அரசின் முடிவு இது குறித்து நான் எதுவும் கூற முடியாது என்று கூறினார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில்  தமிழர்கள் நாகரிமற்றவர்கள் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் கூறியது, தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என பாஜக நிர்வாகி கூறியது மேலும் மும்மொழிக் கல்விக் கொள்கை என தொடர்ந்து தமிழர்களயும், தமிழ் மொழியையும் சிறுமைப்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது, அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது தமிழக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.