பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’  படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் மரணம்!

  நாகை  இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘வேட்டுவம்’ படம் உருவாகி வருகிறது. இந்த  படத்தினை பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நாகைப்பட்டினத்தில் இதற்கான சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

சூட்டிங் ஸ்பாட்டில் காரில் இருந்து ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரத்தில் பா. ரஞ்சித்தின் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.