அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் தற்கொலை : போலீசார் விசாரணை தீவிரம்!

Police intensify investigation after a student dies by suicide at Anna University campus. A student died by suicide at Anna University campus, prompting a detailed investigation by police authorities.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E லெதர் டெக்னாலஜி படித்து வந்த சபரீசன் (19) என்ற மாணவர், இன்று காலை தனது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வரும் அண்ணா பல்கலை வளாகத்தில் இந்நிலையில் மாணவர் தற்கொலை சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.