
தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில் மற்றொரு மாணவனை திட்டியதை தொடர்ந்து, மனமுடைந்த மாணவன் தன்னுடைய அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் கூறியிருந்தனர்
இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, மாணவனை தற்கொலைக்குத் தூண்டியதாக விடுதி பொறுப்பாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 -இன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோதும், அதனை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, நீதிபதிகள் ஏ.அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இநட்த அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மாணவனை திட்டியதையே தற்கொலையின் நேரடி காரணமாகப் பார்க்க முடியாது எனத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாணவருக்கும் பொறுப்பாளருக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, “திட்டுவது தற்கொலைக்குத் தூண்டிய செயலாகக் கருத முடியாது” என்ற அடிப்படையில், அவருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பாளரை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.