பல்கலைக்கழக வேந்தராகிறார் ஸ்டாலின்!

பல்கலைக்கழக வேந்தராகிறார் ஸ்டாலின்! வேந்தர் என்றால் என்ன அவரின் அதிகாரம் என்ன

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருப்பதை மாற்றி, மாநில முதல்வர்களே வேந்தர்களாக இருக்க வழிவகை செய்யும் வகையில் பல்கலைக்கழகத்தின் சட்டத்திருத்திற்கான மசோதாவை  உச்ச நீதிமன்றம் அங்கிகரீத்துள்ளது. இதன் மூலம் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக்கழக வேந்தராகிறார்.

தமிழ்நாடு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமணத்தில் ஆளுநரின் தலையீடு அதிகமாக உள்ளது என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது, இதனை தொடர்ந்து வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டு, மாநில முதல்வர்களே வேந்தர்களாக இருக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதவை சட்டப் பேரவையில் தமிழ் நாடு அரசு நிறைவேற்றியது. 

(இந்திய அரசியலமைப்பின் படி மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாக அமலுக்கு வரும்.)

இதன் பின் ஒப்புதலுக்காக மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாவின் மீது எந்தவிதமான பதில் அளிக்காமல், மசோதவை கிடப்பில் போட்டது. ஆளுநரின் இந்த செயலை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்வதிலா மற்றும் மாகதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய ஆளுநரின் செயல்  சட்டவிரோதமானது என்று கூறி, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் (சட்டப்பிரிவு 143) பயன்படுத்தி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களும் ஒப்புதல் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.

இந்த தீர்ப்பின் மூலம் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தராகிறார்.

வேந்தர் என்றால் என்ன? அவரின் அதிகாரம் என்ன?

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனி சட்டங்களின் மூலம் உருவாக்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் அந்தப் பல்கலைக்கழகம் இயங்கும். மேலும் இந்தச் சட்டங்கள் உருவாக்கப்படும் போதே, ஆளுநர்களை வேந்தர்களாக வைத்தே உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேலாக, ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டதிலிருந்தே அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களே வேந்தர்களாக இருந்துவந்துள்ளனர்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் இந்தப் வழக்கம் தொடரப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் (Chancellor) என்பது பெரும்பாலும் மாநில ஆளுநரே ஆவார். அதாவது, மாநில ஆளுநர் தானாகவே பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கப்படுகிறார். இது ஒவ்வொரு மாநில பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பங்கு ஆகும்.

தமிழ்நாடு அரசு இந்த பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் ஆளுநருக்கு பதில் மாநில முதல்வர்களே பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கப்படுவார்கள்.

வேந்தர் என்பது பல்கலைக்கழக்கத்தின் சட்டப்பூர்வர்மான தலைமை பதவி ஆகும். ஆனால் பல்கலைக்கழத்தின் நிர்வாக செயல்பாடு அனைத்தும் துணை வேந்தர்(Vice Chancellor)  மூலமே நடைபெறும்.

வேந்தரின் மிக முக்கியமான அதிகாரம் துணை வேந்தர்களை நியமிப்பது.(இவை பெரும்பாலும் தேர்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தான் நடைபெறும்).

பட்டமளிப்பு விழா போன்ற முக்கிய நிகழ்வுகள் வேந்தரின் தலைமையில் தான் நடைபெறும்.

பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் சட்டபூர்வமாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் அதிகாரம் வேந்தருக்கு இருக்கிறது. மேலும் பல்கலைக்கழத்தின் முக்கிய தீர்மானம் மற்றும் விதிமுறைகளுக்கு வேந்தரின் ஒப்புதல் மிக அவசியமாகும்.